SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோட்டு முறை பழசு வந்துருச்சு ‘மொய் ஆப்’

6/19/2017 10:37:41 AM

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் செக்கானூரணி இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள மொய் ஆப் மென்பொருளுக்கு மக்களிடையே நல்ல வரேவற்பு கிடைத்துள்ளது. தென் மாவட்டங்களில் மொய் வசூலுக்காக வசந்த விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழாக்களை நடத்துவது வழக்கமாக உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் ஒரு விழாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட மொய் வசூலாகும். மொய் செய்த உறவினர்களின் வீட்டு விசேஷங்கள் வரும்போது அதே தொகையை திருப்பி செலுத்துவதும் வழக்கம்.

தென்மாவட்ட மக்களை பொருத்தவரை மொய் என்பது வட்டியில்லா கடன். இதனை நோட்டுகளில் எழுதி யார் யாருக்கு திரும்ப மொய் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். இதனை எளிமையாக்கும் வகையில், மொய் வசூலிக்கும் பாரம்பரிய பழக்கத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி அசத்தியிருக்கிறார் செக்கனூரணி இளைஞர் பிரபு.

கடந்த 3 மாதங்களில் 30 விழாக்களில் மொய்ப்பணம் வசூலிப்பதை முறைப்படுத்தி உள்ளார். மொய் செய்தவர்களுக்கு உடனுக்குடன் ரசீது, மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதால் விழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவர் தயாரித்த “மொய் ஆப்” என்னும் மென்பொருளுக்கு மக்களிடையே தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X