SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிப்படை வசதியில்லாத கரிசல்பட்டி

6/19/2017 10:37:34 AM

பேரையூர் :  பேரையூர் - சாப்டூர் அருகே அடிப்படைவசதியின்றி பழையூர் கரிசல்பட்டி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மதுரை சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரிசல்பட்டி கிராமம். இங்கு 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்குச் செல்ல பஸ்வசதி கிடையாது.  முற்றிலும் சேதமான  நிலையில் சாலைகள் உள்ளன. கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி கிடையாது. பள்ளிக்கு செல்லும், மாணவ, மாணவியர்  இவ்வழியாக அன்றாடம் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

அத்துடன் மராமத்து பார்க்கப்படாமல்  இடிந்து விழும் நிலையில் சாவடி உள்ளது.   ஊர் அருகில் மயானச்சாலை உள்ளது. ரூ. 4.20லட்சம் மதிப்பீட்டில் தாய் திட்டத்தின் கீழ் 2014- 15ஆம் ஆண்டு தண்ணீர் வசதியுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலை போடப்பட்டதிற்கான தடமே இல்லை.

தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் இல்லையென பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டர்களுக்கும் இக்கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கரிசல்பட்டியைச் சேர்ந்த ஜெயக்கொடி கூறுகையில்,”  கிராமத்திற்கு செல்லும் மயான சாலை முழுமையாக ஜல்லி தூசி மூலமாக சிமெண்ட் குறைவாக போட்டு  அமைக்கப்பட்டது.  அப்போதே புகார் தெரிவித்தோம். ஆனால், ஒப்பந்ததாரர் வேலை முடித்து பணத்தை வாங்கிச் சென்று விட்டார்.

ஒரே ஆண்டில் அந்த சாலை முற்றிலும்  உதவாமல் போனது. எங்கள் கிராமத்திற்கு சாக்கடை வசதி கிடையாது. நாடகமேடை, சமுதாயக்கூடம் கிடையாது. ஊருக்கு வரும் சாலை முற்றிலும் உருக்குலைந்து கிடக்கிறது. எங்கள் ஊர் முழுவதும் ஆதிதிராவிடஇன மக்கள் மட்டுமே உள்ளோம். இதனால் எங்களை அலட்சியப்படுத்தி எந்த அடிப்படைவசதியும் செய்ய அதிகாரிகளும், அரசும் முன்வருவதில்லை” என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X