SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் லாரிகள் நிறுத்த யார்டு ஏற்பாடு கொண்டையம்பேட்டை குவாரிக்கு 2 நாள் லீவு

5/19/2017 12:48:39 PM


திருச்சி: லாரிகளை நிறுத்த இடம் ஏற்பாடு செய்ய வசதியாக கொண்டையம்பேட்டை மணல் குவாரி 2 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.   திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரியில் இதற்கு முன்பு ஒப்பந்தகாரர் மூலம் மணல் சப்ளை செய்யப்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி அனுப்பப்பட்டது. சில நாட்களாக மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்துவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்டையம்பேட்டை மணல் குவாரியில் லாரிகளுக்கு வங்கி டிடியை பெற்றுக்கொண்டு மணல் சப்ளை செய்து வந்தனர்.

தற்போது பொதுப்பணித்துறை மூலம் 2 இயந்திரம் மூலமே மணல் அள்ளப்பட்டு லாரிகளில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 2 இயந்திரம் மட்டுமே பயன்படுத்துவதால் ஒரு நாளைக்கு 150 லாரிகள் மட்டுமே மணல் சப்ளை செய்ய முடிகிறது. ஆனால், கொண்டையம்பேட்டை மணல் குவாரிக்கு மணல் அல்ல தினமும் 3,000 லாரிகள் வருகிறது. மணல் கிடைக்காத மற்ற லாரிகள் அனைத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையிலும், மெயின் ரோட்டிலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்பகுதியில் தினமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதை சரி செய்ய பொதுப்பணித்துறை நிர்வாகம் லாரிகளை வரிசைப்படி குவாரிகளில் மணல் அள்ள அனுப்புவதற்காக, குறிப்பிட்ட இடத்தில் லாரிகளை வரிசைப்படி நிறுத்துவதற்காக 2 யார்டுகள் அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. யார்டில் வரிசைப்படி நிறுத்தப்படும் லாரிகளுக்கு 50 டோக்கன் வீதம் வழங்கி மணல் குவாரிக்குள் சென்று மணல் அள்ளி வர ஏற்பாடு செய்து வருகிறது. இந்தப் பணிகளால், கொண்டையம்பேட்டை மணல்குவாரி நேற்று இயங்கவில்லை. அதேபோல் இன்றும் குவாரி இயங்காது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாரி மூடப்பட்ட விபரம் தெரியாமல் கொண்டையம்பேட்டை பகுதிக்கு வந்த ஆயிரக்கணக்கான லாரிகள் திரும்பி சென்றவண்ணம் இருந்தன.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்