SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரியில் மணல் அள்ளிய 27 மாட்டு வண்டிகள் பறிமுதல்

5/19/2017 12:48:23 PM


திருவெறும்பூர்:  திருவெறும்பூர் அருகே காவிரியில் மணல் அள்ளிய 27 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி, சர்க்கார்பாளையம், வேங்கூர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றில் அனுமதி இன்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் போலீசார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது 27 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். மணல் அள்ளிக்கொண்டிருந்த 27 வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதில் ஒன்றை திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் ஓட்டி வர மற்ற மாட்டுவண்டிகள் பின்தொடர்ந்து அணிவகுத்து வந்தன. இதை அவ்வழியே சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி கடந்து சென்றனர்.  இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு பின் மணல் அள்ளியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X