SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்மட்டம் மேலும் சரிந்தது சிறுவாணியில் குடிநீர் எடுக்க கேரள அதிகாரிகள் கட்டுப்பாடு

5/19/2017 12:35:36 PM


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணை நீர் மட்டம் தரை மட்டத்திற்கு கீழ் சென்று விட்டது. பள்ளத்தில் தேங்கிய பழங்கால தடுப்பணையில் உள்ள நீரை நீர் மூழ்கி மோட்டார் மூலமாக உறிஞ்சி எடுத்து வினியோகம் செய்யும் பணி நடக்கிறது. தற்போது உள்ள நீரை தினமும் 1.5 கோடி லிட்டர் எடுத்தால் இந்த மாதம் இறுதி வரை வினியோகிக்க முடியும். ஆனால் வண்டல் மண் மற்றும் நீர் எடுக்கும் இடத்தில் உள்ள மண் அடைப்பு காரணமாக நீர் எடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீர் எடுக்கப்பட்டதால், 22.46 சதுர கி.மீ பரப்பில் உள்ள அணையின் நீர் தேக்க பகுதி வறண்டு வெடிப்பு விட்டு காணப்படுகிறது. கடைசி கட்ட குடிநீர் எடுக்க கேரள நீர்பாசனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 தினமும் 1.5 கோடி லிட்டர் குடிநீர் எடுக்காமல் 1 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே எடுக்கவேண்டும். நீர் பாதையை தோண்டக்கூடாது, நீர் எடுக்க இயற்கையாக உள்ள ஓடையை ஆழப்படுத்த கூடாது, ஜேசிபி, டிராக்டர்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர். கோவை அதிகாரிகள், நீர் எடுக்கும் பணியை கேரள அதிகாரிகள் தினமும் ஆய்வு ெசய்து வருகின்றனர். அணையில் இறுதிக்கட்ட இருப்பு குடிநீர் சிறிதளவு இருக்கவேண்டும். தென்மேற்கு பருவ மழை பெய்யும் வரை குடிநீர் அளவை மேலும் குறைக்கவேண்டும் என கேரள அதிகாரிகள் தொடர்ந்து நிர்பந்தம் செய்து வருகின்றனர்.

கோவை நகரில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் மேலும் குடிநீர் அளவை குறைக்க முடியாது என கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மறுத்து விட்டனர்.   இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ இந்த மாத இறுதியில் பருவ மழை துவங்கும் என வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடிநீர் அளவை குறைத்தால் பம்பிங் செய்து அனுப்ப முடியாது. எனவே அளவை குறைக்காமல் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும். பருவ மழை துவங்காவிட்டால் ஜூன் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து குடிநீர் எடுக்கும் வழி வகை குறித்து ஆலோசித்து வருகிறோம். சிறுவாணி அணைப்பகுதியில் 20 ஊழியர்கள் தங்கி குடிநீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ’’ என்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்