SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகரில் பலத்த மழை

5/19/2017 12:35:25 PM


கோவை:  கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை, மதிய நேரங்களில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. மாலை நேரங்களில் மேக மூட்டத்துடன் இடியுடன் காற்று மட்டும் வீசி, மழை மக்களை ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மின்னலுடன் இடி இடித்தது. பின்னர் 9.40 மணியளவில் கோவை மாநகரில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யத்தொடங்கியது.  உக்கடம், குனியமுத்தூர், கோவைப்புதூர், சிறுவாணி, தொண்டாமுத்தூர், துடியலூர், கவுண்டம்பாளையம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இந்த மழை 20 முதல் 30 நிமிடம் வரை நீடித்தது. சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில்நிலையம், அரசு மருத்துவமனை முன்பு மழைக்கு சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.   

 மேட்டுப்பாளைம் சாலையில் சென்ட்ரல் தியேட்டர் அருகில் ரோட்டில் 15 மீட்டர் தூரத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. ரோடே ஒருபக்கம் சரிந்ததுபோல் விரிசல் ஏற்பட்டு சாக்கடையுடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • durgapuja2017

    துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

  • worldfastestbullettrain

    உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

  • americaembassylondon

    $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

  • flight_12

    கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்