SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் ஸ்டிரைக்கில் கலந்துகொண்ட போக்குவரத்து தொழிலாளர்களிடம் கெடுபிடி காட்டும் அதிகாரிகள்

5/19/2017 12:35:15 PM

கோவை, :  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக், கடந்த 14ம் தேதி மாலை முதல் துவங்கியது. பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், கடந்த 16ம் தேதி இரவு வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. இதையடுத்து, மறுநாள் முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் அவரவர் பணிக்கு திரும்பினர். இந்நிலையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தொழிலாளர்களை, போக்குவரத்து அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசுவதும், டியூட்டி கொடுக்காமல் அலைக்கழிப்பதும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 இதுகுறித்து தொமுச., கோவை மண்டல தலைவர் பெரியசாமி கூறுகையில்,‘தங்களுக்கு நியாயமான முறையில் வரக்கூடிய பணப்பலன்களுக்காக தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பல்வேறு நெருக்கடி கொடுக்கப்பட்டாலும் அதிமுக., உட்பட அனைத்து தொழிற்சங்கங்கத்திலும் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பணிக்கு திரும்பியுள்ள தொழிலாளர்களிடம், போக்குவரத்து அதிகாரிகள் மோதல் போக்குடன் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

மிரட்டுவது, டியூட்டி கொடுக்காமல் பலமணிநேரம் அலைக்கழிப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது, தேவையில்லாமல் திட்டுவது என அதிகாரிகளின் அராஜக போக்கு அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வதற்கான மனநிலையை ெதாழிலாளர்களிடம் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு நல்லதொரு பணி சூழ்நிலையை ஏற்படுத்தி தரவேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-07-2017

    28-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • policdSERUDAITHOUSAND

    காவலர் பணியிடத்திற்கான உடல் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • ADBULKALAMAmemorialsandsri

    அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்

  • adbULkalamNMMENMORIAL

    அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

  • abdul_ilammm

    இளம் வயது முதல் இறக்கும் நொடி வரையிலான டாக்டர் அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்