SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்லாவரம் ரேடியல் சாலையில் கள்ளநோட்டுகளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை

5/19/2017 12:24:51 PM

தாம்பரம்: பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதிய இரண்டாயிரம் மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகளுடன்  சுற்றி திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்லப்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நாள்தோறும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்நிலையத்துக்கு வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிட்லப்பாக்கம் போலீசார் ரேடியல் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக நடந்து வந்த 2 பேரை  போலீசார் மடக்கி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  அதில், இருவரும் நாகல்கேணியை சேர்ந்த யூசுப் (27), சுல்தான் (28) என்பதும், அவர்களிடம் 2 புதிய ரூ.2 ஆயிரம் மற்றும் 3 புதிய ரூ.500 கள்ள நோட்டுகள் மற்றும் ரூ.6 ஆயிரம் நல்ல நோட்டுகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து வாங்கினார்கள். இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை மாற்றியுள்ளனர்? இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து இருவரிடமும் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-07-2017

    28-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • policdSERUDAITHOUSAND

    காவலர் பணியிடத்திற்கான உடல் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • ADBULKALAMAmemorialsandsri

    அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்

  • adbULkalamNMMENMORIAL

    அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

  • abdul_ilammm

    இளம் வயது முதல் இறக்கும் நொடி வரையிலான டாக்டர் அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்