SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவர்னர் மாளிகை முன் போராட்டம் 30 மாணவர்கள் கைது

5/19/2017 12:24:29 PM

சென்னை: துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாமல் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது. துணைவேந்தர் பதவிக்கு ₹50 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசுத்தரப்பில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதை கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த மாணவர்கள் கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி நேற்று மாலை 5 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே 30 மாணவர்கள் கூடினர். அங்கிருந்து கவர்னருக்கு எதிராக கோஷமிட்டபடி, கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்