SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் பட்டப்பகலில் பயங்கரம் கேஷியர்களை வெட்டி ரூ.15 லட்சம் கொள்ளை * பைக்கில் வந்த 7 பேர் கும்பலுக்கு வலை * எல்லை பிரச்னையில் கோட்டை விட்ட போலீசார்

5/19/2017 12:24:19 PM

சென்னை: ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் கேஷியர்களை வெட்டி ரூ.15 லட்சம் கொள்ளையடித்து சென்ற 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே, பொத்தூர் பகுதியில் புழல் ஏரியின் ஒரு பகுதி உள்ளது. இங்கு அரசு சார்பில் சவுடு மண் எடுக்க குவாரி விடப்பட்டுள்ளது. இந்த குவாரியை திருவள்ளூர் அருகே சோழவரம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கும் மேலாக இந்த மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குவாரியில், தூத்துக்குடியை சேர்ந்த சண்முகநாதன் (25), அம்பத்தூர் சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (26) ஆகியோர் கேஷியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் குவாரியில் மண் ஏற்றிய லாரிகளிடம் பணம் வசூல் செய்துகொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அனிந்து 3 பைக்கில் வந்த 7 பேர் கும்பல், அங்கு பணியில் இருந்த சண்முகநாதன், பிரபாகரனிடம் கத்தி முனையில் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு இருவரும் பணியாமல் பணத்தை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சண்முகநாதன் மற்றும் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர்.

இதில், இருவருக்கும் தலை, தோள்பட்டை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, லாரி டிரைவர்கள் தடுக்க ஓடி வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் லாரி டிரைவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த கேஷியர்கள் இருவரையும் லாரி டிரைவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லாரி டிரைவர்கள் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், டேங்க் பேக்டரி போலீசார் ‘அந்த பகுதி எங்கள் எல்லைக்குள் வராது, செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள்’ என்று அலட்சியமாக கூறியுள்ளனர். அதன்பிறகு செங்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் ‘இது ஆவடி டேங் பேக்டரி காவல் நிலையத்துக்கு உட்பட்டது’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் பொறுமையிழந்த லாரி டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதன்பிறகே டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ரூ.15 லட்சம் கொள்ளையடித்து தப்பிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம்   அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

  • Chinalargestmountainrange

    சீனாவில் மிகப்பெரிய மலைத்தொடரின் வழியே, அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்