SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷனுக்கு இரண்டு கிமீ அலைச்சல்

5/18/2017 11:54:52 AM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே வேங்கடசமுத்திரம் பகுதி மக்கள் ரேஷன்பொருட்கள் வாங்க 2 கிமீ அலைய வேண்டியுள்ளது. திருமங்கலம் நகராட்சிக்குட்பட்டது வேங்கடசமுத்திரம் எனப்படும் மாம்பட்டி. இப்பகுதி நகராட்சியின் 16வது வார்டில் அமைந்திருந்தாலும் திருமங்கலம் நகரினை விட்டு தள்ளி சுமார் 2கி.மீ தூரம் குண்டாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. முற்றிலும் கிராமத்தின் தோற்றத்தில் காணப்படும் இந்த வார்டில் 00க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 150 ரேஷன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு என ரேஷன்கடை தனியாக இல்லை. திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலையொட்டியுள்ள மின்வாரிய 2ம் எண்கடையில் தான் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்த கடை உசிலம்பட்டி ரோட்டில் வேங்கடசமுத்திரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் தள்ளி அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ரேஷன் பொருள்களை வாங்க இந்த பகுதி மக்கள் 2 கி.மீ தூரம் அலையவேண்டியுள்ளது. அதிலும் பலநாள்கள் ரேஷனில் பொருள்கள் வினியோகம் இல்லை. இதனால் வீணாக அலையும் நிலை உண்டாவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தங்களது பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை உடனடியாக திறக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போதுராஜன் கூறுகையில், ‘‘பகுதிநேர கடை கேட்டு நாங்கள் பலமுறை கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை பரிசீலிக்ககூட இல்லை. ரேஷன்பொருள் வாங்க விடுப்பு எடுத்து டூவிலரிலோ அல்லது பஸ்சிலோ செல்லவேண்டியுள்ளது. பொருள்கள் இல்லையெனில் வீண் அலைச்சலாக எங்களின் வேலையும் பாழ்படுகிறது. எங்களின் நிலையை நேரில் அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக பகுதிநேர ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.


ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • durgapuja2017

    துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

  • worldfastestbullettrain

    உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

  • americaembassylondon

    $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

  • flight_12

    கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்