SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் முக்கால் மணிநேரம் தாமதம்

5/18/2017 11:54:43 AM

மதுரை: மதுரையிலிருந்து சென்னை எக்மோருக்கு, பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயிலில்தான் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சென்னை செல்வது வழக்கம். எனவே இந்த ரயில் சரியான நேரத்திற்கு புறப்பட்டுச்செல்லும். இந்நிலையில் நேற்று இரவு 8.35 மணிக்கு ரயில் புறப்பட்ட போது, ஏசி கோச்சில் உள்ள குளிர்சாதன கருவிகள் வேலை செய்யவில்லை. இதனால் ஏசி பெட்டியிலிருந்து பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் ரயில் பெட்டிகளை இணைக்க பயன்படுத்தப்படும் கப்ளிங்குகளும் வேலை செய்யவில்லை. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட டெக்னீசியன்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து பழுது சரிசெய்யப்பட்டு இரவு 9.15 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.  ரயில் முக்கால் மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாலும், ரயிலில் குளிர்சாதன கருவிகள் வேலை செய்யாததாலும், ரயிலில் அமர்ந்திருந்த முன்பதிவு பயணிகள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் பெரும் அவதிக்குள்ளானார்கள். மதுரை: மதுரை அச்சம்பத்து உபமின் நிலையத்திற்கான மிக உயர்மின் அழுத்த மின் வயர்கள் மாற்றம் செய்யப்படுவதால்,
இன்று (மே18) காலை9 மணி முதல் மாலை 5 மணி வரை, அச்சம்பத்து மேற்கு பகுதி, வேலுச்சாமி நகர், து.புதுக்குடி, சம்பக்குடி, கீளாநெரி, புதுக்குளம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்