SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடையாம்பட்டியில் 44 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி

5/18/2017 11:04:12 AM

காடையாம்பட்டி:   காடையாம்பட்டி வட்டத்தில் 44 ஏரிகளில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் மண் மேடுகள் அதிகம் உள்ளன. இதனால் மழை காலங்களில் குறைந்தளவு தண்ணீரே தேங்குவதால், ஒரு போக விவசாயம் மட்டுமே செய்ய முடிகிறது. அத்துடன் ஏரிகள் களிமண்ணால் மூடப்பட்டு இருப்பதால், தண்ணீர் நிலத்திற்குள் செல்லாமல் ஆவியாகி விடுகிறது.
 இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் சரிந்து வருகிறது. காடையாம்பட்டி வட்டத்தில் மொத்தம் 44  ஏரிகளில் களிமண் எடுக்க, மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள்,  பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி விஏஓக்களிடம் விண்ணப்பித்து  மண் எடுக்க அனுமதி பெற்று கொள்ளலாம்.  இதன் தொடக்க விழா கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரியில் நடந்தது. ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் தலைமை வகித்தார். மேட்டூர் சப் கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் அனுமதியளிக்கப்பட்ட 44 ஏரிகளிலும் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கு ஏற்ப அதிகபட்சம் 30 டிராக்டர் மண் எடுக்கலாம். இந்த வாய்ப்பின் மூலம், அனைத்து விவசாயிகளும் தங்கள் விவசாய நிலங்களை பதப்படுத்திக்கொண்டு, விவசாய பணிகளை மேற்கொள்ளுமாறு சப் கலெக்டர் மேகநாதரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை

மேட்டூர் சப் கலெக்டர் மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்து விட்டு சென்ற பின்னர், 4 மணி நேரத்தில் 2 பொக்லைன் கொண்டு 10க்கும் மேற்பட்ட  டிப்பர் லாரிகளில் 200க்கும் அதிகமான லோடு மண் எடுத்து அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஒரு  விவசாயிகளுக்கு 25 டிராக்டர் மட்டுமே என கூறி விட்டு, விவசாயிகள் என்ற போர்வையில் டிப்பர் லாரிகளில் மண் எடுத்து வணிக நோக்கத்துக்காக செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும்,  இதை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • durgapuja2017

  துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

 • worldfastestbullettrain

  உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

 • americaembassylondon

  $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

 • flight_12

  கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

 • navarathri_festivall111

  நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்