SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் கனமழை: மரம் வேரோடு சாய்ந்தது

5/18/2017 11:04:03 AM

சேலம்:  சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. அகரமஹால் அருகே மரம் வேரோடுசாய்ந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சேலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசுவதால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து விட்டு, வீடுகளில் முடங்குகின்றனர். மேலும், வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகளிலும் வியாபாரம் மந்தமாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு திடீரென மழை பெய்தது. சிறிது நேரமே பெய்தாலும், கொட்டி தீர்த்த மழையால் பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில் அன்னதானப்பட்டி அகரமஹால் அருகே சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ் வழி யாக மக்கள் நட மாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-07-2017

    28-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • policdSERUDAITHOUSAND

    காவலர் பணியிடத்திற்கான உடல் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • ADBULKALAMAmemorialsandsri

    அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்

  • adbULkalamNMMENMORIAL

    அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

  • abdul_ilammm

    இளம் வயது முதல் இறக்கும் நொடி வரையிலான டாக்டர் அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்