SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதாரமின்றி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு ₹7 ஆயிரம் அபராதம்

5/18/2017 11:03:54 AM

சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் செயல்படும் இறைச்சி கடைகள் சுகாதாரமின்றி இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் செல்வராஜூக்கு புகார்கள் வந்தன. சுகாதாரமின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர நல அலுவலருக்கு, கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர் நல அலுவலர் செல்வகுமார் தலைைமயில் கொண்டலாம்பட்டி சுகாதார அலுவலர் சேகர், சுதாகர்,  ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், கோபிநாத் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று கொண்டலாம்பட்டியில் உள்ள 20 இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில், சுகாதாரமின்றி இறைச்சி கடைகளை வைத்திருந்த உரிமையாளர்களிடம் இருந்து ₹7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில், சுகாதார விதிகளை  கடைபிடிக்காத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.   இதை தொடர்ந்து, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 53 வது வார்டு அருணாச்சலம் மெயின் ரோடு, கே.எஸ் நகர் பின்புறம் ஆகிய பகுதிகளில் கூட்டு சிறப்பு துப்புரவு பணி நடந்தது. இப்பணியில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்