SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரிமளம், அறந்தாங்கி பகுதிகளில் குளம், ஊரணி தூர்வாரும் பணி துவக்கம் எம்எல்ஏக்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு

5/15/2017 10:41:16 AM

திருமயம்: அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் உள்ள பால்குளத்தை தூர்வாரும்  பணியை திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று எம்எல்ஏ ரகுபதி  சென்று தொடங்கி  வைத்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க திமுக நிர்வாகிகள் கிராமப்புற நீர் நிலைகளை தாங்களாகவே முன்வந்து தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். இதனடிப்படையில் எம்எல்ஏ ரகுபதி அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் உள்ள பால்குளத்தை தூர்வாரும் பணியை திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று தொடங்கி வைத்து பேசினார். திமுக ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முகமது இப்ராஹிம், திமுக ஒன்றிய நிர்வாகிகள் சீனி பழனியப்பன், கோபால் சுப்பையா, செல்வராஜ், ராமச்சந்திரன், சேட்டுமுருகன், நிர்மலா, பெரியசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இதனை எம்எல்ஏ ரகுபதி பார்வையிட்டார். அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பொதுமக்களே தங்களது செலவில் மாரியம்மன் கோவில் ஊரணியை தூர்வாரும் பணியை ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் துவக்கி வைத்தார். அறந்தாங்கி அருகே மாங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஊரணியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தங்களது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியை துவக்கி வைத்து ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பேசுகையில், மாங்குடி முத்துமாரியம்மன் கோவில் ஊரணியை பொதுமக்களின் சொந்த பணமான ரூ.2 லட்சத்தில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நல்ல திட்டங்களை தற்போதைய தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் இருந்தாலே போதும் என்றார். மாங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராணிசுந்தர்ராஜ், துரைசாமி, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணவிநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்