SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமா தயாரிப்பாளர் புகார் விருகம்பாக்கம் எஸ்.ஐ., மீது வழக்குபதிவு செய்யவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு

4/21/2017 12:35:54 PM

சென்னை: சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விருகம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜன் என்ற ஆர்.டி.ரங்கன். இவர், சைதாப்பேட்டை 23வது குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆர்.ஆர்.சினி புரொடக்‌ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை தயாரித்தேன். படத்திற்கு பொருத்தமான தலைப்புக்காக காத்திருந்தபோது, அன்னை தெரசா இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற  சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்  கிஷோர் பதிவு செய்திருந்த ‘மணி’ (பணம்) என்ற தலைப்பை எனக்கு வழங்கினார். இதற்காக, ₹2 லட்சத்தை நான் அவருக்கு வழங்கினேன். இதையடுத்து, இந்த திரைப்படத்தை தயாரித்து, இறுதிகட்ட பணிகள் உள்ள நிலையில் கிஷோர், சந்தானம் மற்றும் விருகம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் விரும்பாக்கத்தில் உள்ள எனது அலுவலகத்துக்குள் கடந்த  2016 பிப்ரவரி 16ம் தேதி அத்துமீறி நுழைந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர்  ஒரு அறையில் வைத்து அடைத்தார். கிஷோரும், சந்தானமும்  படத்தின் ‘ஹார்டு டிஸ்க்கை’ எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தும் அவர்கள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. கமிஷனரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும் அவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யாததால், கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தேன். இந்த வழக்கு நவம்பர் 17ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஏப்ரல் 2ம் தேதி புகாரை முடித்து அதன் மீதான அறிக்கையை தாக்கல் செய்து விட்டதாக, விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதிலளித்தார். இதை தொடர்ந்து, குற்றவியல் கோர்ட்டை நாடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, எனது திரைப்படத்தின்  ‘ஹார்டு டிஸ்க்கை’ எடுத்துச் சென்ற நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட், ‘மனுதாரர் துரைராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்