SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 நோயாளிகளுக்கு இதய ஓட்டை நவீன சிகிச்சை மூலம் சீரமைப்பு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

4/21/2017 12:35:43 PM

சென்னை: இதயத்தில் ஓட்டை இருந்த 7 நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனை குணப்படுத்தி சாதனை செய்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வெளி நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள இதயவியல் துறை சார்பில் ரத்தமின்றி, தழும்பின்றி இதயத்தில் உள்ள ஓட்டையை நவீன சிகிச்சை முறையில் அடைக்கும் சிகிச்சை ஒரே நாளில் 7 பேருக்கு செய்யப்பட்டது. இரண்டரை வயது குழந்தை முதல் 40 வயது பெரியவர் வரை இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் மற்றும் இதயவியல் துறையை சேர்ந்த டாக்டர்கள் கண்ணன், மூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இதயத்தில் ஏற்பட்ட ஓட்டையை ஏட்ரியால் செப்தல் குறைபாடு என்று அழைப்பார்கள். அந்த வகையில், இதயத்தில் ஏற்படும் ஓட்டையை அடைப்பதற்கு ரத்தமின்றி, தழும்பின்றி வலி இல்லாமல் நவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 10ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை ஒரே நாளில் திருநெல்வேலி இம்மானுவேல் ராஜா (இரண்டரை வயது), பொன்னேரி தீதூ (11), காஞ்சிபுரம் உதயகுமார் (21), கொளத்தூர் உமா மகேஸ்வரி (26), வியாசர்பாடி சாமந்தி (27), கும்மிடிப்பூண்டி கன்னியப்பன் (45), குரோம்பேட்டை பானுமதி (38) ஆகிய 7 பேருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வலியின்றி இயல்பு நிலையில் உள்ளார்கள்.

இந்த சிகிச்சை முறையானது, நோயாளிகளின் காலில் உள்ள ரத்த குழாய் வழியாக நவீன கருவியை செலுத்துவோம். அந்த கருவி இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைக்கு சென்றதும் விரிவடையும். அதன்பிறகு அந்த ஓட்டை அடைக்கப்படும். இதனால் நோயாளிகளுக்கு வலி இருக்காது. அரை மயக்கத்தில் சிகிச்சையை செய்யலாம். கேத்லாப் சென்டரில் 30 நிமிடம் முதல் 45 நிமிடத்துக்குள் நவீன சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்தால் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது என்றனர். சிகிச்சை பெற்ற கூலி தொழிலாளியான உமா மகேஸ்வரி கூறுகையில், ‘இதயத்தில் ஏற்பட்ட நோயால் மிகவும் அவதிப்பட்டேன். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ₹4 லட்சம் வரை செலவாகும். எங்களால் அந்தளவுக்கு செலவு செய்ய முடியாது.தற்போது, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து எந்தவித வலியும் இல்லை. செலவும் இல்லை. சிகிச்சை அளித்ததற்கான ரத்தமோ, தழும்போ எதுவும் இல்லை. ஒரே நாளில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்