SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் பயணத்தில் மட்டுமல்ல பஸ்சிலும் மயக்க மருந்து ஜுஸ் தம்பதியிடம் 14 பவுன் கொள்ளை

4/21/2017 11:27:26 AM

திருச்சி: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி தனலெட்சுமி(73), புற்று நோயால் பாதிக்கப்பட்டு சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த 17ம் தேதி தம்பதிகள் சிகிச்சைக்காக பஸ்சில் திருச்சி வந்தனர். மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று, மீண்டும் சத்திரம் பஸ் நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ஜெயங்கொண்டம் புறப்பட்டனர். அப்போது உடன் ஏறிய பயணி ஒருவர், தம்பதிகளிடம் ேபச்சு கொடுத்தார். சமயபுரம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி, கோயில் பிரசாதம் வழங்கினார். தம்பதிகளும் அதனை பெற்றுக்கொண்டனர். பஸ் லால்குடி அருகே சென்றபோது அதே நபர் ஜுஸ் கொடுத்தார்.அதனை தம்பதிகள் வாங்கிக் குடித்தசிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். பஸ் ஜெயங்கொண்டம் சென்றதும் கண்விழித்தபோது தம்பதிகள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போனது தெரிந்தது. அப்போதுதான் தங்களின் அருகிலிருந்தவர் கொடுத்தது மயக்க மருந்து கலந்த ஜுஸ் என்பதை உணர்ந்தனர். மர்ம நபர் 9 பவுன் தாலி செயின், 4 பவுன் வளையல், மோதிரம், செயின் என மொத்தம் பதினான்கரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். தம்பதிகள் மயக்க நிலையில் இருந்து முழுமையாக சுயநினைவுக்கு திரும்பாததால் அவர்களை சக பயணிகள் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சாந்தலிங்கம் திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பயணங்களின்போதுதான், பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் , ஜுஸ் கொடுத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இப்போது பஸ் பயணத்திலும் பயணிகளை மயங்க வைத்து நகை கொள்ளை  நடந்திருப்பது பஸ் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Sachin45thBirthday

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

  • SingaporeperumalTemple

    164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்