SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி சென்ற லாரிகள் சிறைபிடிப்பு போலீசார் பேச்சுவார்த்தை

4/21/2017 11:27:10 AM

திருச்சி: திருச்சி கொண்டையம்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி சென்ற  லாரிகளை பொதுமக்கள் நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி கொண்டையம்பேட்டையில் 2ம் கட்ட மணல் விற்பனை செய்யும் ஸ்டாக் யார்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி வந்து கரைப்பகுதியில் உள்ள இந்த யார்டில் இருப்பு வைக்கப்படும். பின்னர் யார்டில் இருந்து 2ம் கட்ட விற்பனையாக மணல் இருமடங்கு விலைக்கு விற்கப்படும். யார்டில் இருந்து பெருமளவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு மட்டுமே  மணல் கொண்டு செல்லப்படுகிறது. மற்ற உள்ளூர் லாரிகள் பொதுப்பணித்துறையினரிடம் பணம் கட்டி ரசீது பெற்று கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று குவாரிகளில் மணல் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். இதனால் உள்ளூர் லாரிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் அரசு மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்ல முடிகிறது. இந்த 2வது கட்ட மணல் விற்பனை நிலையத்தில் 24 மணி நேரமும் மணலை கூடுதல் விலைக்கு எடுத்துச்செல்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த யார்டில் மணல் சேமிப்பதை முறையாக கண்காணிப்பதும் கிடையாது. கடந்த 18ம் தேதி உள்ளூர் விடுமுறை தினத்தன்று லாரிகளில் மணல் அள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் 19ம் தேதி தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தாலுகா அலுவலகத்தில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. நேற்று காலை அப்பகுதி மக்கள் கொள்ளிடம் ஆற்றில் கொண்டையம்பேட்டை பகுதியில் 2ம் கட்ட விற்பனைக்காக அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளுக்கு அனுமதி வழங்கியபோது பின் நேரமிட்டு ரசீது வழங்கினார். இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.  சிறைபிடிக்கப்பட்ட லாரிக்கு,  ரசீது எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ரங்கம் போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 4 லாரிகளையும் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அபராதம் விதிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து பொதுமக்களும் கலைந்து சென்றனர்.   இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அவதி

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள இரண்டாம் கட்ட மணல் விற்பனை மையத்தில் விதிமுறைகளை மீறி தினமும் இரவு, பகலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் இப்பகுதியில் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு விவசாயத்திற்கு தான் இப்பகுதியில் தண்ணீர் எடுக்க முடியாமல் இருந்தது. தற்போது கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் கோடைக்காலம் முடியும் வரை மணல் அள்ளத் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பெரியளவில் போராட்டம் நடத்தி மணல் அள்ளுவதை தடுப்போம்’ என்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulletRAILCHINAsdrder

    மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

  • WaterONMARSMMANS

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

  • SPANfporestTREEDGT

    ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

  • flood_kuttralam

    குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

  • ramzan_cheer

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்