SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமற்ற 15 டன் கிழங்கு மாவு லாரியுடன் பறிமுதல்

4/21/2017 10:44:29 AM

சேலம்:  சேலம் கருங்கல்பட்டி, களரம்பட்டி பகுதிகளில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்கப்படுவதாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, சேலம் உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் சுகாதார பணியாளர்கள் நேற்று அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, 2 கடைகளில் தரமற்ற சமையல் எண்ணெயை சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட கடைகளில் இருந்து 250 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமம் இல்லாமல் கடையை நடத்தியது தொடர்பாக நோட்டீஸ் வழங்கினர். இதேபோல், சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் தரமற்ற ஜவ்வரிசி மாவு தயாரித்த ஆலையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு தரமற்ற கிழங்கு மாவை வாங்கி, ஆசிட் கலந்து ஜவ்வரிசி தயாரித்து வந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்க உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ‘‘தரமற்ற கிழங்கு மாவை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு அயோத்திப்பட்டணம் கொண்டு செல்வதாக வந்த புகாரின் பேரில், அந்த லாரியை மடக்கி சோதனை செய்தோம். அப்போது ஜவ்வரிசி தயாரிக்க கொண்டு செல்லப்பட்ட, 15டன் தரமற்ற கிழங்கு மாவு, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.  

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்