SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

29,30ம் தேதிகளில் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை 38,968 பேர் எழுதுகின்றனர்

4/21/2017 10:43:55 AM

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 29மற்றும் 30ம்தேதிகளில் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை 38,968 பேர் எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 29மற்றும் 30ம்தேதிகளில் நடக்கிறது. இதற்கான  முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில், உதவி காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து கலெக்டர் சம்பத் தெரிவித்திருப்பது:  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு 24 மையங்களில் நடைபெறுகிறது. 11 ஆயிரத்து 699 பேர் தாள்-1 தேர்வையும், 27 ஆயிரத்து 269 பேர் தாள்-2 தேர்வையும் எழுதுகின்றனர். இந்த வகையில் ெமாத்தம் 38,968 பேர், ேதர்வெழுத உள்ளனர். இத்தேர்வில் கண்காணிப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் என 2,050 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கோட்டாட்சியர் அலுவலர் நிலையில் தேர்வினை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு வாரிய விதிமுறைகளுக்கு ஏற்ப வினாத் தாள் மற்றும் விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் பணிகளை முறையாக செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை மையங்களுக்கு எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். தேர்வு வாரிய வழிமுறைகளை தேர்வர்கள் உரிய முறையில் கடைபிடித்திட வேண்டும். ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulletRAILCHINAsdrder

    மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

  • WaterONMARSMMANS

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

  • SPANfporestTREEDGT

    ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

  • flood_kuttralam

    குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

  • ramzan_cheer

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்