SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல்

4/21/2017 10:34:49 AM

ேகாவை : கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய இடங்களில் கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகளுடன் போலீசாரும் திணறி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள், 11 எப்.எல்.2 உரிமம் பெற்ற ஸ்டார் ஓட்டல் பார்கள், 89 எப்.எல்.3 உரிமம் பெற்ற லாட்ஜ், ஓட்டல் பார்கள் இயங்கி வந்தது.

இதில் 154 டாஸ்மாக் கடைகள் நெடுஞ்சாலையை ஒட்டி 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்ததால் மூடப்பட்டது. 38 தனியார் பார்களும் மூடி, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் தற்போது 50 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் மதுபாட்டில் வாங்க திண்டாடி வருகின்றனர். திருச்சி, அவினாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு, சிறுவாணி, சத்தி ரோட்டை ஒட்டியுள்ள 80 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மூடப்பட்ட கடைகளுக்கான மாற்று இடங்களை தேர்வு செய்ய ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு இருப்பதால், புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பது அதிகாரிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதில் ஏற்பட்ட மோதல் கோவை போலீசாரை உஷார்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை டாஸ்மாக் நிர்வாகம், முதல் கட்டமாக 54 டாஸ்மாக் கடைகளையும், பல கட்டமாக மேலும் 100 கடைகளையும் திறக்க முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் பட்டியலை ஒப்படைத்ததுள்ளது. போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் நிலையிருப்பதால், பட்டியலை இறுதி செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் கட்சி, அமைப்பு, தன்னார்வலர்களை சமாளிக்க போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
மாவட்ட அளவில், டாஸ்மாக் கடைகள் மூடியதால், சுமார் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை திறக்க ஆய்வு பணி நடக்கிறது. இதுவரை இடம் இறுதி செய்யப்படவில்லை. கடைகள் திறக்கும் முன்பே மக்கள் மனுவுடன் குவிகிறார்கள். ரோடு மறியல், போராட்டம் என மக்கள் குவிந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2017

    23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்