SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்

4/21/2017 10:34:43 AM

கோவை : மத்திய அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 1 மாதமாக பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த போதிலும் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோவை மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தலைவர் வழுக்குப்பாறை பாலு தலைமை தாங்கினார். பொது செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாற்றம் அமைப்பினர் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மனு எழுதினர். அதில் அனைத்து விவசாயிகளும் தங்களது ரத்தத்தால் கையொப்பமிட்டனர். பின்னர் அந்த மனுவை மத்திய அரசுக்கு அனுப்பினர்.
 
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மேலும்  விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படாது என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்