SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

4/21/2017 10:34:35 AM

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக கன்னியம்மாள் என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது. இதேபோல், ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்து மருத்துவமனையில் விட்டு சென்ற ெபண் குழந்தையும் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு குழந்தைகளையும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கவிதாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் இந்த குழந்தைகளை சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைத்தார். இதில், மருத்துவமனையின் ஆர்எம்ஒ சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரெக்ஸ்லின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குழந்தைகள் சரணாலயம் காப்பகத்தில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, குழந்தை இல்லாதவர்களுக்கு சட்டப்படி தத்துகொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்