SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகை அணை நீர் 10 நாட்களில் ‘காலி’ அகோர வெயிலில் ஆவியாவது அதிகரிப்பு குடிநீர் சப்ளை முடங்கும் அபாயம்

4/19/2017 11:37:08 AM

மதுரை: வைகை அணை நீர் அகோர வெயிலில் ஆவியாவது அதிகரித்துள்ளது. இன்னும் 10 நாட்களில் காலியாகி, குழாய்களில் மதுரைக்கான குடிநீர் குழாய் மூலம் சப்ளை அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 24.15 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 23.85 அடியாகி குட்டை போல் காட்சி அளிக்கிறது. 180 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் 110 மி.க.அடி மண்ணாக இருப்பதால் அணை மதகு வழியாக வெளியேறாது. நீரை விட மண் அதிகம் உள்ளது. எனவே 70 மி.க. அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும்.
 மதுரை நகர் மற்றும் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக வைகை அணையில் இருந்து தினமும் 40 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. ஒரு நாளில் 6 மில்லியன் கனஅடி காலியாகி வந்தது. நேற்று அகோர வெயிலில் ஒரு மில்லியன் கனஅடி ஆவியாகி போனது. இதனால் நேற்று ஒரே நாளில் 7 மில்லியன் கனஅடி நீர் காலியானது.  இதன்படி தற்போதைய நிலையில் இன்னும் 10 நாட்களில் தண்ணீர் காலியாகும் சூழல் உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் தண்ணீர் ஆவியாவதும் அதிகரித்துள்ளது. வைகை அணை நீர் அடியோடு நிற்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மதுரை நகருக்கு அன்றாட குடிநீர் தேவை 240 மில்லியன் லிட்டர்.

ஆனால் தற்போது சுமார் 100 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. மாநகராட்சி குழாய்களில் கடந்த 5 மாதங்களாக 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது. இதுவும் ஏப்ரல் இறுதி வரை சப்ளை செய்ய நீர் இருப்பு இல்லாமல் வைகை அணை கைவிரிக்கிறது. மாநகர் தெருக்களிலுள்ள 5 ஆயிரத்து 67 பொதுக்குழாய் மற்றும் 1 லட்சத்து 33 ஆயிரம் தனி இணைப்பு குழாய்களும் முடங்கி, லாரிகள் மூலம் சப்ளை செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்போதே லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் மாநகராட்சி திணறுகிறது. ஏப்ரல் இறுதியில் குழாய்களில் சப்ளை முடங்கினால் நகர் முழுவதும் லாரி மூலம் சப்ளை செய்ய முடியுமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.  முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக இறங்கியது. அங்கிருந்து வெளியேற்றப்படும் 60 கனஅடி நீரில் ஒரு சொட்டு கூட வைகைக்கு வந்து சேரவில்லை. எனவே இன்னும் பத்து நாட்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே தப்ப முடியும். மழை பெய்ய தவறினால், என்ன செய்வது? என்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் சாதிக்கின்றது. ஆட்சி நீடிக்குமா? என்ற குழப்பத்தால் மதுரை மாவட்டத்தை சார்ந்த அமைச்சர்களோ இங்குள்ள குடிநீர் பிரச்னையை கண்டுகொள்ளவே இல்லை. எனவே அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர் என்கிற புகார் எழுந்துள்ளது.

காலியாகும் வீடுகள்

குடிநீர் மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்கான சாதாரண தண்ணீருக்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் 600 அடி முதல் 1000 அடி வரை அதல பாதாளத்திற்கு இறங்கியது. பல்வேறு பகுதிகளின் வீட்டு போர்வெல் பொய்த்து போயின. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் புதூர், தபால் தந்தி நகர், மேலமடை, கோமதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாடகை வீட்டில் குடியிருப்போர் காலி செய்து விட்டு, சொந்த ஊர்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்