SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் 107டிகிரி கோர வெயில் தாண்டவம் மதுரை வீதிகள் வெறிச்சோடியது பயணிகளே இல்லாமல் ஓடிய பஸ்கள்

4/19/2017 11:36:58 AM

மதுரை: கோர வெயில் தாண்டவத்தை தாங்க முடியாமல் மதுரை வீதிகள் நேற்று வெறிச்சோடின. மாலை 5 மணி வரை பஸ்களில் பயணிகள் மிகவும் குறைந்து காணப்பட்டனர். ஏராளமான பஸ்கள் பயணிகளே இல்லாமல் ஓடின.  மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று கோடை வெயில் அனலாக கொதித்தது. காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் ஆரம்பமாகி, மதியம் 2 மணிக்கு உச்சிக்கு ஏறியது. வெயிலின் அளவு 107டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு எகிறியது. மாலை 4 மணிக்கு பிறகு தான் தணிய தொடங்கியது. வெயில் சுட்டெரித்த நேரங்களில் மக்கள் வெளியே தலை காட்ட அஞ்சினர். இதனால் மதுரையில் நெருக்கடி மிகுந்த சிம்மக்கல், கோரிப்பாளையம், டவுண் ஹால்ரோடு, விளக்குதூண், பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமும், டூவீலரில் செல்வோரும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. திறந்திருந்த கடைகளிலும் சரக்கு வாங்க ஆ்ட்கள் வரவில்லை. மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. வெளியூர் மற்றும் டவுண் பஸ்களில் பயணிகள் கூட்டமின்றி, குறைந்த பயணிகளே பயணித்தனர். ஏராளமான பஸ்கள் பயணிகளே இல்லாமல் ஓடின. பகல் நேர ரயில்களிலும் கூட்டமில்லை. மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். தார் ரோட்டில் கால் வைக்க முடியாமல் கொதித்தது. அனல் காற்று வீசியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். வீடுகளில் மின்விசிறி காற்றும் சூடாகவே இருந்தது. இரவிலும் வெக்கை தணியவில்லை. தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் தீரவில்லை. மாலையில் குளிர்பான கடைகளில் கூட்டம் மொய்த்தது. தர்பூசணி விற்பனை அமோகமானது. இப்போதே வெயில் தாண்டவமாடுவதால், அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பித்து 28ம்தேதி  வரை நீடிக்கிறது. அந்த நாட்களில் கத்திரி வெயிலின் கொடுமையை எப்படி சமாளிப்பது? என்பது மக்களின் அச்சமாக உள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்