பெண்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் அத்துமீறல் கலெக்டரிடம் புகார்

4/19/2017 11:36:45 AM
மதுரை: மதுரை இஸ்மாயில்புரம் 8வது தெருவை சேர்ந்த பெண்கள் 50க்கு மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் வீரராகவராவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில்,‘ மாநகராட்சி சார்பில் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் எங்கள் பகுதியில் குடிதண்ணீர் வராத காரணத்தால் போராட்டம் நடத்தினோம். மாநகராட்சி சார்பில் புறநகரில் இருந்து லாரியில் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விட மாநகராட்சி மறுக்கிறது. மற்ற பகுதிக்கு தண்ணீர் வரும் போது அதே நேரத்தில் எங்கள் தெருவுக்கு மட்டும் தண்ணீர் விட மாநகராட்சி ஊழியர்கள் மறுக்கின்றனர். மேலும் இரவில் வீடுகளில் சோதனை செய்கிறோம் என கூறி மாநகராட்சி ஊழியர்கள் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுகின்றனர். இதனால் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். வழக்கம் போல் எங்கள் தெருவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்து மாநகராட்சிக்கு மனுவை அனுப்பினார்.
மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் முகாமில் மருத்துவக்குழு அமைப்பு
சாலை பாதுகாப்பு வார விழா
மாநகராட்சி சங்கங்களின் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்காக வலம் வரும் மருத்துவ சிகிச்சை வாகனங்கள்
கண்டன ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் நேர்மையை குணமாக கருத வேண்டும்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
LatestNews
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்
15:48
இரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்
15:40
குடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு
15:29
வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை
15:25
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்
15:17
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்
15:00