SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 268 பேர் மாயம்

4/1/2017 11:38:34 AM

நாமக்கல்:  தமிழ்நாடு டிராக்கிங் சிஸ்டம் இணையதளத்தின் கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த ஒரு  மாதத்தில் மட்டும் 268 பேரும், 24 மணி நேரத்தில் 10 பேரும் மாயமாகி உள்ளதாக, நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில்  ஜெனிவா குளோபல் திட்ட ஆலோசகர் திடுக் தகவல் தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில்  கிராமப்புற மகளிர் மேம்பாட்டு மையம், பொத்தனூர் மற்றும் ராசிபுரம்  டான்பாஸ்கோ அன்பு இல்லம் ஆகிய நிறுவனத்துடன் சார்பில்,  ஆள் கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மசோதா 2016 குறித்த  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.டான்பாஸ்கோ  நிறுவனத்தின் திட்ட இயக்குனர் ஆல்பர்ட் வரவேற்றார். கிராமப்புற மகளிர்  மேம்பாட்டு மைய இயக்குனர் ரெனிடா சரளா, ஆள் கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு  மற்றும் மறுவாழ்வு மசோதா -2016 குறித்த, தமிழ்நாடு இடைக்கால பணிக்குழுவின்  பணிகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து ஜெனிவா குளோபல் திட்ட ஆலோசகர் பாலமுருகன் பேசியதாவது: தமிழ்நாடு  டிராக்கிங் சிஸ்டம் இணையதளத்தின் கணக்கீட்டின்படி, தமிழகத்தில் மட்டும்,  கடந்த 24 மணி நேரத்தில், 10 பேரும், ஒரு மாதத்தில் சராசரியாக 268  பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை  காணாமல் சென்றவர்கள் 16,165 பேரில், கிடைத்தவர்கள் 10,853 பேர். தேசிய குற்ற ஆவண கணக்கின் படி கடத்தப்பட்டவர்கள் இதுவரை 6,877 பேர். இதில்  கடத்தப்பட்டவர்களை மீட்டெடுத்தால், அவர்களுக்கு எந்தவிதமான மறுவாழ்வு  வசதிகள் ஏதுமில்லை. இந்த சட்டத்தை பற்றிய புரிதலே இன்றும் சரியாக  ஏற்படவில்லை. சட்ட நுணுக்கள் குறித்த தெளிவை விட, சட்டத்தின் படி சில  செயல்கள் தவறு என்று தெரிந்தாலே போதும்.

எனவே, தன்னார்வ தொண்டு  நிறுவனங்களுக்கு, இதைப்பற்றிய தெளிவு மிக அவசியம். இதற்காகவே கருத்தரங்கங்கள்  நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில்  ஜெனிட் தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட இயக்குனர் அந்தோணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு, ஆட்கடத்தல்  தடுப்புப்பிரிவு எஸ்ஐ., தமிழ்செல்வி, குழந்தைகள் நல குழும தலைவர்  சிவகாமவள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர். கிராமப்புற மகளிர் மேம்பாட்டு மைய நிறுவன திட்ட மேலாளர்  ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2017

  12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்