SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெயருக்கு தான் அரசு மருத்துவமனை இலவசம் 10 நாட்களில் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளேன் * பணம் கொடுத்தால்தான் சிகிச்சை * பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

3/20/2017 2:29:44 PM

சென்னை: ராஜீவ்காந்தி அரசு ெபாது மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்தால் தான் சிகிச்சை நடப்பதாக பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர, மருத்துவமனையில் இதயம், நுரையீரல் உள்ளிட்ட பல நோய்களினால் பாதிக்கப்பட்ட 2500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் எதற்கெடுத்தாலும், காசு கேட்டு நச்சரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சுப்புராமராஜீவ் (65). இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய காலில் புண் இருந்தது. சர்க்கரை காரணமாக அந்த புண் ஆறாமல் கால் எடுக்க கூடிய சூழல் உருவானது. இதையடுத்து, மருத்துவர்கள் அவரது காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். ஆனால், சர்க்கரை அளவு அதிகமானதால் கடந்த வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 நாட்களில் அறுவை சிகிச்சை செய்து வெளியே வரும் போது, ஆப்ரேஷன் தியேட்டர் ஊழியர்களுக்கு ரூ.300, படுக்கையை சுத்தம் செய்யும் ஊழியருக்கு ரூ.100 என ரூ.8 ஆயிரத்திற்கு மேல் லஞ்சமாக கொடுத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுப்புராமராஜீவின் மகன் விஜேந்திரன் கூறியதாவது: என்னுடைய தந்தையை சர்க்கரை நோய் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். வீல் சேரில் அழைத்து செல்லும் ஊழியருக்கு ரூ.100, படுக்கையை சுத்தம் செய்வருக்கு ரூ.100,  டிரஸ்சிங் செய்பவருக்கு ரூ.200, அறுவை சிகிச்சை செய்து வெளிேய வரும் போது அங்குள்ள ஊழியருக்கு ரூ.300, இதுதவிர மருத்துவமனையில் எங்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. இவ்வாறு, 10 நாட்களில் ரூ.8 ஆயிரத்திற்கு மேல் லஞ்சமாக கொடுத்துள்ளோம். பெயருக்கு தான் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை  இலவசம் என்று உள்ளது. ஆனால், மருத்துவமனையில் ஒரு துரும்பு அசைய வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தால் தான் நடக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இலவசமாக நல்ல சிகிச்சை எடுக்கலாம் என்று வந்தோம். ஆனால், இங்கு வந்த பிறகு தான் லஞ்சம் கொடுத்தால் தான் எதுவும் நடக்கும் என்று தெரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.  

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • durgapuja2017

  துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

 • worldfastestbullettrain

  உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

 • americaembassylondon

  $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

 • flight_12

  கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

 • navarathri_festivall111

  நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்