SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவரில் துளை போட்டு டாஸ்மாக் கடையில் ரூ.2.75 லட்சம் கொள்ளை கொட்டிவாக்கத்தில் துணிகரம்

3/20/2017 2:29:32 PM

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு நுழைந்த மர்ம நபர்கள் ₹2 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ராஜிவ்காந்தி சாலை கொட்டிவாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடையை ஒட்டி பாரும் செயல்பட்டு வருகிறது. இதில் சூபர்வைசராக கூவத்தூரை அடுத்த கத்திவாக்கத்தை சேர்ந்த முத்துவேல் (46), சேல்ஸ்மேன்களாக செய்யூரை சேர்ந்த லட்சுமணன் (43), சென்னையை சேர்ந்த பிரபாகரன் (41) ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ. 2லட்சத்து 75 ஆயிரத்தை கல்லாவில் வைத்து விட்டு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.நேற்று காலை கடையை திறந்தனர். அப்போது, கடையின் சுவரில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கல்லாவை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. பாரின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், டாஸ்மாக் கடையின் சுவரை துளைபோட்டு உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணம் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் சூபர்வைசர் முத்துவேல், துரைப்பாக்கம் போலீசில் நேற்று காலை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராஜிவ்காந்தி சாலை மேட்டு குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை பார்வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இதே போல் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இரு சம்பவங்களையும் போலீசார் ஒப்பிட்டு பார்க்கையில், ஒரே கும்பல்தான் டாஸ்மாக் கடையில் துளை போட்டு கொள்ளையடித்துள்ளனர் என சந்தேகிக்கின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்