SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமயபுரம் மாரியம்மன் கோயில் 2வது வார பூச்சொரிதல் விழா 300 வண்டிகளில் விடிய விடிய பூ ரத ஊர்வலம்

3/20/2017 12:04:36 PM

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2வது வார பூச்சொரிதல் விழாவையொட்டி சுமார் 300 அலங்கார ரதங்களில் பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை அம்மன் சிலை முன் குவித்தனர்.சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருந்து வருகிறார். இதனால் அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்த பூச்சொரிதல் விழா என்ற பெயரில், பல்வேறு வகையிலான மலர்களைக் கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைப்பது வழக்கம்.

திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கார வண்டிகளில் மலர்களை கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி நேற்று அதிகாலை முதல் விடிய விடிய 300க்கும் அதிகமான இடங்களில் இருந்து அலங்கார ரதங்களில் பக்தர்கள் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு வந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதுமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. இதையொட்டி எஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DEVI100080000

    பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1,08000 வளையல்கள் அணிவிப்பு !!

  • floodINGUJARAT120killed

    குஜராத்தில் வெள்ளத்திற்கு 126 பேர் பலி...55,000 பேர் மீட்பு: கூடுதல் பேரிடர் மீட்பு படை வருகை

  • gujarath_flood

    குஜராத் வெள்ளம் - பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

  • ecrROADcanalBUSACCID

    கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பு தறிகெட்டு ஓடிய சொகுசு பேருந்து பக்கிங்காம் கால்வாயில் கவிழ்ந்தது

  • ABDulkkalam2NDANNITRREEE

    அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பெசன்ட் நகரில் நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்