SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து காலிகுடங்களுடன் சாலை மறியல்

3/20/2017 12:04:26 PM

மணப்பாறை: மணப்பாறை அருகே உள்ள ஆஞ்சநேய நகரில் கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் நேற்று காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உசிலம்பட்டி ஊராட்சியில் பழுதடைந்துள்ள மின்மோட்டாரை சரி செய்து, குடிநீர் முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Two_wheeler_launch

    ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

  • amman_murugan123

    மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

  • hyper_dubai123

    12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

  • jakto_jiyo11

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X