SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் ஐகோர்ட் நீதிபதி பேச்சு

3/20/2017 12:04:18 PM


திருச்சி:  நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசினார்.திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரியின் ஆட்சி மன்ற குழு செயலாளர் ராமநாதன் வரவேற்றார். தலைவர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளாளர் கோபிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசியதாவது:
கல்வி, அறிவுதான் நாட்டின் செல்வங்கள். நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கலாசாரம், மொழி ஆகியவை மீதும் அறிவியல் தொழில்நுட்பத்தின் பார்வை பட வேண்டும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இலக்கியத்தில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. சங்க காலங்களில் இருந்து பெண்களை சார்ந்தே தமிழக வரலாறு உள்ளது. இப்போது நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் தொல்லை, வரதட்சணை கொடுமை ஆகியவை தொடர்பாக 60 சதவீத வழக்குகள் உள்ளன. இதே நிலை நீடித்தால் பெண்களின் வளர்ச்சி பாதிக்கும். இதை உணர்ந்து சமுதாயம் செயல்பட வேண்டும். முதல்வர் சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார். புரவலர்கள் கந்தசாமி, சுந்தரராஜூலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DoGFestival2017BAnn

    கடும் எதிர்ப்புகளை மீறி சீனாவில் களைகட்டிய நாய்க்கறி திருவிழா

  • Pslv38rocketlaunchingcountDOW

    31 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது

  • 5001STUDENTSyofss

    தண்ணீரைச் சேமிக்க வலியுறுத்தி 5001 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்தனர்

  • traffic_chennai11

    லயோலா சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம் : வாகன நெரிசலில் சிக்கி திணறும் மத்திய சென்னை

  • 22-06-2017

    22-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்