SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிரந்தர பொது விநியோக திட்டத்தில் பருப்பு, பாமாயில் கூட்டுறவு சங்கம் வலியுறுத்தல்

3/20/2017 11:57:32 AM

மதுரை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க மாநில அமைப்பாளர் வெங்கடாசலபதி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுவிநியோக திட்டம் நடத்தும் கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்டு வரும் நஷ்டத்திற்கும், கூட்டுறவு பணியாளர்களின் நலன்களுக்கும், சீர்திருத்தம் அவசியம் தேவை.கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் டிஎன்சிஎஸ்சி பணியாளர்களுக்கு இணையான சம்பளம் நிர்ணயித்து ஒரே ஆணையின் கீழ் வழங்க வேண்டும். பாமாயில், உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு சிறப்பு பொது விநியோகத் திட்டம் என்பதை நீக்கிவிட்டு, அவற்றை நிரந்தர பொது விநியோகத் திட்டமாக்க வேண்டும். ரேஷன் கார்டுகள் 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் உள்ளது. வெள்ளை ரேஷன் கார்டுதாரர்கள் விருப்ப சீனிக்கு பதிலாக அரிசி பெற விரும்பினால் அந்த கார்டை அரிசி கார்டாக மாற்றி ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும். நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத்துறை பரிந்துரை இல்லாமல் ரேஷன் கடை பணியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்