SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூர் அருகே பாதியில் நிற்கும் சர்வீஸ் ரோடு பணி அடிக்கடி விபத்து நடக்கிறது

3/20/2017 11:57:20 AM

மேலூர்: மேலூர் அருகே சர்வீஸ் ரோட்டில் ஒரு பகுதியில் சாலை அமைக்காமல் விட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மதுரையில் இருந்து திருச்சி, சென்னை வரை செல்லும் நான்கு வழிச்சாலையால் வாகனங்கள் விரைந்து செல்ல முடிகிறது. இந்த நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்ற போது குறுக்கிடும் முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளுக்கு மட்டும் பெரிய மேம்பாலங்கள் மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன. திருமோகூர் சாலை, சிட்டம்பட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குதெரு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மேலூர் பகுதியில் திருவாதவூர் ரோடு, சிவகங்கை ரோடு, திருப்பத்தூர் ரோடு ஆகிய மூன்று முக்கிய சாலைகளுக்கு மேல் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் சிவகங்கை சாலையின் மீது அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோட்டில் 4 பக்கமும் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. சர்வீஸ் ரோட்டின் மூன்று பக்கம் சாலை அமைத்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, ஒரு பக்கத்தில் மட்டும் சாலையை அமைக்கவில்லை. இதனால் சென்னை, திருச்சி, காரைக்குடி பகுதிகளில் இருந்து நான்குவழிச்சாலையில் வரும் வாகனங்கள் சிவகங்கை ரோட்டிற்கு இறங்க முடியாமல் திணறுகின்றன. வேறு வழியின்றி எதிர்புறம் உள்ள சர்வீஸ் ரோட்டில் தவறாக வாகனங்களை ஓட்டுகின்றனர். இதே தவறை தான் இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து பள்ளி வாகனங்களும் செய்கின்றன. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, உடனடியாக விடுபட்ட அந்த ஒரு சர்வீஸ் ரோட்டையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2017

    26-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • faRKENchicken4LEGS

    பிரேசிலில் நான்கு கால்கள் உடன் பிறந்த 'ஃபிராங்கன்-கோழி' : வினோதமான படங்கள்

  • peraumLTEMPLefestival

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ திருவிழா : ஆதிகேசவப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

  • 25-03-2017

    25-03-217 இன்றைய சிறப்பு படங்கள்

  • dogWIThoutPULSEresuced

    எரியும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி உயிர்க்கு போராடிய நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட: நம்பமுடியாத படங்கள்