SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய திட்டம் அறிமுகம் மக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் போலீஸ்

3/20/2017 11:57:09 AM

மதுரை: புகார் தந்த மக்களின் குடியிருப்புக்கே நேரடியாக சென்று கருத்துக்களை கேட்கும் திட்ட முகாம் மதுரையில் போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார்யாதவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அருண்சக்திகுமார் தலைமையில் அனைத்து மகளிர் காவல்நிலையங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் குறிப்பிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி மக்கள் அளித்த புகார் தொடர்பாக நேரடியாக கருத்து கேட்டறியும் முகாம் அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பில் கூடல்நகர் எல்லைக்குட்பட்ட ஆனையூர், அஞ்சல்நகர் பகுதிகளில் வரதட்சணை ஒழிப்புப்பிரிவு உதவி கமிஷனர் கனகேஸ்வரி, தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா கொண்ட குழுவினர் நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் 30 பெண்கள், 20 ஆண்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது மதுரை நகர் போலீஸ் வாட்ஸ்அப் குழு பற்றியும், அதன் மூலம் நேரடியாக புகார் தெரிவிக்கும் வசதி குறித்தும் போலீசார் விளக்கினர். புகார் கொடுத்தவர்களின் இடத்திற்கே தேடிச்சென்று தீர்வு காணும் திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DEVI100080000

    பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1,08000 வளையல்கள் அணிவிப்பு !!

  • floodINGUJARAT120killed

    குஜராத்தில் வெள்ளத்திற்கு 126 பேர் பலி...55,000 பேர் மீட்பு: கூடுதல் பேரிடர் மீட்பு படை வருகை

  • gujarath_flood

    குஜராத் வெள்ளம் - பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

  • ecrROADcanalBUSACCID

    கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பு தறிகெட்டு ஓடிய சொகுசு பேருந்து பக்கிங்காம் கால்வாயில் கவிழ்ந்தது

  • ABDulkkalam2NDANNITRREEE

    அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பெசன்ட் நகரில் நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்