SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் புத்தக கண்காட்சியில் அலைமோதும் வாசகர் கூட்டம்

3/20/2017 11:02:21 AM


நாமக்கல்:நாமக்கல்லில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் வாசகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில், சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.இதில், சூரியன் பதிப்பக அரங்கில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் வளர்ப்பு, அரசியல், ஆன்மீகம், மருத்துவம், சமையல், பொது அறிவு, கல்வி, போட்டித்தேர்வு, வேலை வழிகாட்டி என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு வாசகர்கள் ஆர்வமுடன் குவிந்து புத்தகங்களை தேர்வு செய்து வருகின்றனர். கண்காட்சியில், 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், புத்தக கண்காட்சிக்கு வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
காலச்சுவடு, மதி நிலையம் உள்ளிட்ட முன்னணி பதிப்பங்களின் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் வரை தள்ளுபடியில் அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் கண்காட்சி, இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.தினமும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கண்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. நேற்று சித்த மருத்தவர் பூபதிராஜன், “சித்த மருத்துவமும், சுகாதாரமும்” என்ற தலைப்பில் பேசினார். இதில், மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2017

    26-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • faRKENchicken4LEGS

    பிரேசிலில் நான்கு கால்கள் உடன் பிறந்த 'ஃபிராங்கன்-கோழி' : வினோதமான படங்கள்

  • peraumLTEMPLefestival

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ திருவிழா : ஆதிகேசவப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

  • 25-03-2017

    25-03-217 இன்றைய சிறப்பு படங்கள்

  • dogWIThoutPULSEresuced

    எரியும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி உயிர்க்கு போராடிய நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட: நம்பமுடியாத படங்கள்