SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவுகேட்பு மனு குளறுபடியை சரிசெய்ய ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

3/20/2017 11:02:12 AM


நாமக்கல்:தொழிலாளர் நல அலுவலகத்தில் புது பதிவு, பதிவுகேட்பு மனு ஆகியவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய, நல அலுவலர் முன்னிலையில் வாரம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல பொதுசேவை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் பாலுசாமி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்கள் கலந்து கொள்ள வசதியாக, தமிழ்நாடு தொழிலாளர் வாரியத்தில் மத்திய, மாநில மற்றும் பதிவு பெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினராக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் புது பதிவு, பதிவுகேட்புமனு, குளறுபடிகளை சரி செய்ய வாரம் ஒருமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து தொழிலாளர்கள் அலுவலகத்தில் நல அலுவலர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். வாரியங்கள் தொடங்கப்பட்டபோது, தொழிலாளியின் பங்களிப்பு இருந்தது. தற்போது அது இலவசமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்ப காலங்களில் இருந்ததை போன்றே, பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு தொழிலாளியின் பங்களிப்பு கட்டாயம் வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். கட்டுமான தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலையை உயர்த்துவதை கட்டுப்படுத்த வேண்டும், என்றார். அப்போது ஒருங்கிணைப்பாளர்கள் சின்னுசாமி, மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்