SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முறைகேடுகளை தடுக்க நலவாரிய உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் கலெக்டர் தகவல்

3/20/2017 11:02:04 AM

நாமக்கல்:முறைகேடுகளை தடுக்க, நாமக்கல் தொழிலாளர் அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், தொழிலாளர் அலுவலகம் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  

இதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியம், தையல் தொழிலாளர் நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம், சலவை தொழிலாளர் நல வாரியம்,  பனைமர தொழிலாளர் நல வாரியம், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம், ஓவியர் நல வாரியம், பொற்கொல்லர் நல வாரியம், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம், வீட்டுப்பணியாளர் நல வாரியம், சமையல் தொழிலாளர் நல வாரியம் உள்பட 17 நல வாரியங்களில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் 2,08,467 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இதில் அடையாள அட்டைகள் பெற்றுள்ள தொழிலாளர்கள், வருவாய் துறை மற்றும் இதர வேறு பல துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலும் உதவிகள் பெறுவதாக புகார் வந்துள்ளது.இந்த முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையிலும், இனிமேல் உறுப்பினர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தங்களது உறுப்பினர் அடையாள அட்டை எண்ணையும், ஆதார் அடையாள அட்டை எண்ணையும் அளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன் ஆதார் அடையாள அட்டை நகலை இணைத்து 31ம் தேதிக்குள் மோகனூர் ரோட்டில் உள்ள தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அளிக்க வேண்டும். ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ள ஒவ்வொரு சனிக்கிழமையும் அலுவலகம் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-09-2017

    27-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்