SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிநிரந்தரம் செய்யாததை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

3/20/2017 10:50:34 AM

கோவை: பென்சன், பணிநிரந்தரம் செய்யாத போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து, கோவை சுங்கம் கிளை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் நேற்று ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
 கோவை திருச்சி ரோட்டில் சுங்கம் கிளை-1 மற்றும் கிளை 2 உள்ளது. இங்கிருந்து 210 பஸ்கள், நகர மற்றும் புறநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. டிரைவர், கன்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் என 1100 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பென்சன் வழங்கக்கோரி ஓய்வுபெற்றோரின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் சேமநல டிரைவர், சேமநல கன்டக்டர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும், சுங்கம் கிளை-1 மற்றும் 2 ஆகியவற்றை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் டெப்போ முன் குவிந்தனர். பின்பு 2 கிளைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த சேமநல டிரைவர், சேமநல கன்டக்டர்களை பணிநிரந்த செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சுங்கம் கிளைகளில் நுழைவுவாயில் முன்பு போராட்ட பந்தல் அமைத்து, போக்குவரத்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அதிமுக..வின் அண்ணா தொழிற்சங்க பேரவை தவிர தொமுச., சிஐடியூ., உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

எந்த பஸ்களையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த கிளைகளில் இருந்து எந்த பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படவில்லை. 210 பஸ்களும் இயக்கப்படாததால் சுங்கம் கிளை முன்பு நீண்ட வரிசையில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஆனால், கோவை மண்டலத்தில் உள்ள பிற கிளைகளில் இருந்து வழக்கம்போல பஸ்கள் இயக்கப்பட்டன.  இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,‘பென்சன் வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓய்வூதியத்தை விரைவில் வழங்க வேண்டும்.

கோவை மண்டலத்தில் 674 பேர், சேமநல டிரைவர், சேமநல கன்டக்டர்கள் உள்ளனர். 240 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு நம்பர் கொடுத்து, பணிநிரந்தர செய்ய வேண்டும் என்பது ஒப்பந்த விதி. ஆனால், 600 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தும் இதுவரையில் பணிநிரந்தரம் செய்யவில்லை.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கோவை மண்டலத்தில் உள்ள 17 கிளைகள் முன்பு இந்த போராட்டம் விரிவுப்படுத்தப்படும். பஸ்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்’ என்றனர்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iVGCSwarBOATDD

    கடற்படைக்கு சொந்தமான ஐசிஜிஎஸ் வாரட் என்ற கப்பல் பணியிலிருந்து விடுவிக்கும் விழா நடந்தது

  • hEAYtarffivINkoyemBEDU

    3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • 29-04-2017

    இன்றைய சிறப்பு படங்கள்

  • akstyaTRHI2017

    அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

  • solarPETRlolBUNK

    துபாயில் முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் முதல் பெட்ரோல் பங்க் அமைப்பு