SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சம்தவிர்த்தான் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

3/14/2017 12:58:07 PM

திருவில்லிபுத்தூர்: தினகரன் செய்தி எதிரொலியாக, அச்சம்தவிர்த்தான் அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருவில்லிபுத்தூர் அருகே, அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதியில்லை என நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி சர்வேஸ்வரன், அச்சம்தவிர்த்தான் அரசு பள்ளியில் ஆய்வு நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தொடக்க கல்வி அலுவலர் அனுராதா, வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுகி மற்றும் அச்சம் தவிர்த்தான் பகுதியை சேர்ந்த வருவாய் துறையினர் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தனர். பாம்பு வராமல் இருக்க சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும் ஆலோசித்தனர். இதனிடையே, மார்க்சிஸ்ட கட்சி ஒன்றியக்குழு நிர்வாகி சசிகுமாருடன், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கல்வித்துறை சந்தித்து, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்