SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்சிறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை டியூஷன் சென்டரை சூறையாடிய பொதுமக்கள்

3/4/2017 12:09:32 PM

புதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் ஒரு கட்டிடத்தின் மாடியில்  தனியார் டியூஷன் சென்டர் கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். அவரது மகன் இதை நிர்வகித்து வருகிறார். இங்கு முன்சிறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளும், தனி தேர்வு எழுதும் மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த டியூஷன் சென்டரில் மாணவிகளை பாலியல் சில்மிஷம் செய்வதாக அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில்  பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தனி தேர்வு எழுதும் மாணவ மாணவிளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது மாலையில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு மாணவி ஒருவர் ஹால்டிக்கெட் வாங்குவதற்காக ெசன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த நிர்வாகியின் மகன் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாணவி தனது வீட்டிற்கு ெசன்று தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் டியூஷன் ெசன்டருக்கு வந்து தட்டி ேகட்டனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. ஏற்கனவே இது குறித்த புகார் இருந்ததால் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது வாலிபர் தலைமறைவாகியிருந்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் டியூஷன் சென்டரை சூறையாடினர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்