SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுகையில் 68வது குடியரசு தின விழா கோலாகலம்

1/27/2017 12:10:50 PM


புதுக்கோட்டை:  புதுகை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.புதுகை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 68வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் எஸ்பி லோகநாதன் முன்னிலையில் கலெக்டர் கணேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானப்புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் தியாகிகளை கவிரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்எஸ்ஐ செல்வராஜ், பெண் போலீஸ் பூர்ணா உள்ளிட்டோருக்கு பராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் உள்ளட்சித் துறையில் சிறப்பாக பணியாற்றிய உதவி இயக்குனர் ஊராட்சிகள் (பொ) முருகண்ணன், வருவாய்த்துறையில் சப்.கலெக்டர் அம்ரீத் மற்றும் வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றியவர்களுக்கும்,  சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் பரிமளதேவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

மேலும் வட்டார விரிவாக்க கல்வியாளர் ஆனந்தசெல்வம், உள்ளிட்ட 26 துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 280 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 9 பள்ளிகளை சேர்ந்த 830 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசினையும், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3ம் பரிசினையும் பெற்றனர்.  இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராமசாமி, சப்.கலெக்டர் அம்ரீத் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சோதனைக்கு பின் அனுமதி குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள ஆயுதப்படை மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரையும் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை செய்த பிறகு அனுப்பி வைத்தனர். மேலும் கறுப்பு குடை, துணிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை. மேலும் ஆயுதப்படை மைதானத்தில் இரண்டு வழிகள் அமைத்திருந்தனர். இதில் கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள்   செல்ல ஒருவழியும், பொதுமக்கள், அலுவலர்கள் செல்ல ஒருவழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் வரும் வழியல் மெட்டல் டிடக்டர் வைத்து சோதனை செய்த ஒரு போலீசார் வருபவர்களை ஒருமையில் பேசியடி சோதனையில் ஈடுபட்டார். இதனால் அவ்வப்போது அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்

 குடியரசு தின விழா கலை நிழ்ச்சியில் புதுகை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி காண்போரை கவர்ந்தது.

மழையில் நனைந்த
பள்ளி
குழந்தைகள்

 புதுகையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் கொடியற்றிய பிறகு சற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அணிவகுப்பு மேற்கொண்ட போலீசார் மழையில் நனைந்தனர். அப்போது பள்ளி குழந்தைகள்  கலைநிகழ்ச்சியில் நடத்த தயார் நிலையில் இருந்ததால் நீண்ட நேரம் நனைந்தபடி நின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்