SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலை மீது மாதா சிலை அமைத்ததற்கு எதிர்ப்பு இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு

12/28/2016 11:36:56 AM

செங்கல்பட்டு : மாதா சிலை அமைத்து வழிபடுவதால், இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. செங்கல்பட்டு அடுத்த சோகன்டி கிராமத்துக்கும், அருகில் உள்ள அழகுசமுத்திரம் கிராமத்துக்கும் இடையே காப்பு காடு மற்றும் மலை உள்ளது. இந்த காப்பு காடு, அழகு சமுத்திரம் கிராமத்துக்கு உட்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் சோகன்டி கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் சிலர், மலை அடிவாரத்தில் சிறியதாக மாதா ஆலயம் கட்டி வழிபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால், இந்த ஆலயத்தில் விழா குழுவினர் சிலர், மலை மீது சென்று சிலுவை அமைத்து, கொடி நட்டு, பந்தல் போட்டனர். மேலும், கிறிஸ்துமஸ் விழாவை அங்கே கொண்டாடினர். இதையறிந்த அழகு சமுத்திரம் கிராம மக்கள், நேற்று முன்தினம் அங்கு சென்றனர். இது எங்கள் கிராமத்துக்கு சொந்தமான மலை. இங்கு சிலுவை நடுவது தவறு. வேண்டுமானால், உங்கள் கிராமத்தில் வைத்து கொள்ளுங்கள் என கூறி, அதனை அகற்ற வேண்டும் என்றனர். இதற்கு, கிறிஸ்தவ குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனை கண்டித்து அழகு சமுத்திர கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர் சோகன்டி - திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, நேரில் வந்து சமரசம் செய்தார். அப்போது,  இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம். தற்போது மறியலை கைவிடுங்கள் என தாசில்தார் சீதா கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பு மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடந்தது.
திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, டிஎஸ்பிக்கள் மாமல்லபுரம் சேகர், செங்கல்பட்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர்கள் திருக்கழுக்குன்றம் அனுமந்தன், செங்கல்பட்டு ருக்மாங்கதன் ஆகியோர் தனித்தனியே, இருதரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்டனர்.

அதில், அழகு சமுத்திரம் மக்கள், மேற்கண்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், சோகன்டி மக்கள், சிலை அமைத்துவிட்டோம். நாங்கள் அங்கேயே வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர். இதனால், நேற்று இரவு வரை அவர்களுடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இரு கிராம மக்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்