SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சிக்கு தனி அலுவலர் நியமனம்

10/27/2016 12:41:49 PM

திருவள்ளூர், : உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு பெற்றது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு, தனி அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்த, மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தனி அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது. ஊராட்சிகளுக்கான தனி அலுவலராக, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார். ஊராட்சிகளுக்கான “செக் பவர்’’, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கி.ஊ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணை தலைவருக்கும் செக் பவர் இருந்த நிலையில், மற்ற யாருக்கும் தற்போது ‘’செக் பவர்’’    பிரித்து கொடுக்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சி) மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். வில்லிவாக்கம், பூந்தமல்லி, புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஆகிய  ஒன்றியங்களுக்கு, உதவி இயக்குனர்(தணிக்கை) நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், 24 வார்டுகளை உள்ளடக்கிய மாவட்ட ஊராட்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம், தனி அலுவலர்களை சார்ந்தே இருக்கும். கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவதுபோல், தனி அலுவலரே ‘’மினிட் நோட்’’டில் பதிவு செய்து, வழக்கம் போல் பணியை செய்ய உத்தரவிடலாம்.ஊராட்சிக்கு மட்டும், தனி அலுவலருக்கு ‘’செக் பவர்’’’’ இருக்கும். மற்ற தனி அலுவலர்கள், தங்களது நிர்வாக பணியை மட்டும் செய்தால் போதும். உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் சாதக, பாதகங்களுக்கு தனி அலுவலரே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்’’’’ என்றனர்.

புகார் பதிவேடு வைக்க கோரிக்கை

கவுன்சிலர்கள், தலைவர்கள் யாரும் பதவியில் இல்லாததால், மக்கள் நேரடியாக தனி அலுவலர் அல்லது ஊரக வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு, குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில், புகார் பதிவேடுகளை வைத்திருந்தால், மக்கள் புகார்கள், கோரிக்கைகளை பதிவு செய்யலாம். தினமும், பதிவேடுகளை ஆய்வு செய்து, தனி அலுவலர் மூலம் மேல்நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்