SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3500 ஆண்டுகளுக்கு முன் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரீகம்

10/25/2016 11:28:03 AM

புதுக்கோட்டை : கீரமங்கலம் அருகில் உள்ள மங்களநாடு கிராமத்தில், எழுத்துகள் தோன்றுவதற்கு முன்பு வில்லுன்னி ஆற்றங்கரையில் வாழ்ந்த நாகரீக சமூகம். அதற்கான சான்றுகளும் குறியீடுகளுடன் உள்ள தடையங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்லுனி ஆறு என்று தற்போது அழைக்கப்படும் ஆறு உள்ளது இதன் கரையோரப்பகுதி அம்பலத்தான் மேடு என்ற பழமையான வாழிடம் உள்ளது. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதில் மிக அபூர்வமான தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இது குறித்து  மணிகண்டன் கூறியதாவது: வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் ராமசாமிபுரம் மங்களநாடு ஆகிய ஊர்களின் கிராம எல்லையில் 173 ஏக்கர் பரப்பளவில் இத்திடல் அமைந்து உள்ளது இதில் பாலை நிலத்தாவரங்களான வன்னி மரங்கள், அஸ்பராகஸ், கற்றாழை, சப்பாத்திக்கள்ளி உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் முட்புதர் காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக உருக்கு கழிவுகளும், உலோக வார்ப்பு மண் உருளைகளும், கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் பாரிவேட்டை என்ற பெயரில்  திருவிழா நடப்பதையும், இவ்விழாவில் வன்னி மரத்தின் கீழ் நின்று வில் எய்தும் விழா  கொண்டாடப்பட்டு வந்தததையும் சான்றுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் வழியாக இந்தியா முழுவதுமாக தாய்தெய்வ வழிபாட்டு முறையும் வன்னி மரத்தின் தொடர்பையும் அறிய முடிகிறது. மன்னர் மறைந்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடு என்று பதிற்றுப்பத்து பாடல் வன்னி மரக்காட்டிற்கும் தாழி புதைக்கப்படும் இடத்திற்கும் உள்ள தொடர்பை கூறுகிறது.

மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமது செய்தி யாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில் அக்காலத்தில் இருந்த நடைமுறையிலிருந்த எழுத்துக்களை பயன்படுத்தி எழுதி வைத்துள்ளதை நாம் கீரல்கள் என்கிறோம்,  இக்குறியீட்டை மட்பாண்டம் செய்பவரின் அடையாளம் என்று கூறிவரும் நிலையில் இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், இந்தியாவின் பெருவாரியான பகுதியில் இக்குறியீடுகள் கிடைத்து உள்ளதன் மூலம் இதனை உலகலாவிய மொழிக்குறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.  இந்த குறியீட்டு எழுத்துகள் ,  எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதால் 3500 ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்டவையாகவே கருதப்படுகிறது. இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்