SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணத்தில் பள்ளி தரநிலை மதிப்பீட்டு திட்ட பயிற்சி

10/24/2016 10:31:03 AM

கும்பகோணம் : கும்பகோணத்தில் தேசிய அளவிலான பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டு திட்ட மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமையாசிரியர்கள் 314 பேர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் தேசிய அளவிலான பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டு திட்ட மண்டல அளவிலான பணிமனை பயிற்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமை வகித்தார்.

ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தம், சென்னை எஸ்சிஈஆர்டி மணிவேல், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் அனைவருக்கும் இடைநிலைகல்வி இயக்க இணை இயக்குனர் குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

பணிமனை பயிற்சி கடந்த 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. முதல் நாளில் நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களும், இரண்டாம் நாள் சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களும், மூன்றாம் நாள் திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து உதவி தொடக்கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், இடைநிலை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் உள்பட 314 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியின் கருத்தாளர்களாக திருச்சி மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் ரங்கநாயகி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணாளன், திருச்சி  ஆசிரியப் பயிற்றுனர்கள் சந்திரன் மற்றும் வினோத், சென்னை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி உமாமகேஸ்வரி ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை கும்பகோணம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு வெங்கடராஜிலு உள்ளிட்ட அலுவலர்கள் செய்ந்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்