SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலத்திலேயே முதல் முறையாக கரூர் நூலகத்தில் லிப்ட் வசதி

10/17/2016 12:34:47 PM

கரூர்: மாவட்ட நூலகத்தில் ரூ.13லட்சம் மதிப்பில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட மைய நூலகம் திருவள்ளுவர் மைதானம் எதிர்புறம் எம்எல்ஏ அலுவலகம் அருகில் செயல்படுகிறது. மாவட்ட நூலகத்தில் 20 ஆயிரத்து 223உறுப்பினர்களும், ஒருலட்சத்து 12ஆயிரத்து 670 நூல்களும் உள்ளன. அதிக வாசகர்களை நூலகத்திற்கு வரவழைக்கும் நோக்கில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாசகர் வட்டம் சார்பில் ஒவ்வொரு மாதம் 3ம் ஞாயிற்றுக்கிழமை சிந்தனைமுற்றம் என்ற கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் சிறப்பு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு வருகின்றனர். மூன்று தளங்கள் கொண்டதாக மாவட்ட நூலகம் செயல்படுகிறது. வாசகர்களின் வசதிக்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட மைய நூலகர் சிவகுமார் கூறியதாவது: நூலக தரைத்தளத்தில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், வாசிப்பு பிரிவு செயல்படுகிறது. முதல்தளத்தில் நூல் இரவல் பிரிவு மற்றும் சிறுவர், இணையதளம், ஜெராக்ஸ், பிரெய்லி நூலகம் உள்ளன. இரண்டாம் தளத்தில் போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் குறிப்பெடுக்கும் அறையும் உள்ளன. மேலும் மாவட்ட நூலக அலுவலகமும் செயல்படுகிறது. மாவட்ட மைய நூலகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, பொது நூலக நிதியில் இருந்து லிப்ட் வசதி அமைக்க ரூ.13 லட்சம் அரசுஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவுபெற்று சோதனை ஓட்டத்திற்கு பின்னர் தற்போது பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மாவட்ட அளவில் லிப்ட்வசதியுடன் உள்ள நூலகம் கரூர்தான் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்