SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாள சாக்கடை நீரால் அழிக்கப்படும் கிருதுமால் நதி கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

10/17/2016 8:42:57 AM

மதுரை, : கிருதுமால் நதியின் முகத்துவாரத்தை அழித்து வரும் மாநகராட்சி, ஊராட்சி மீது பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மதுரை நகரில் வைகை நதிக்கு அடுத்த அதன் கிளையாக பெரிய நதியாக ஓடியது கிருதுமால் நதி. வைகை நதி வடபகுதி மக்களுக்கும், விவசாயத்திற்கும் கைகொடுத்தது. இதேபோல் கிருதுமால் நதி வைகையின் தென் பகுதி மக்களுக்காக உருவானது.

இந்த நதி நாகமலை அருகே, துவரிமானின் ‘தவரிமான்’ கண்மாயில் உற்பத்தியாகும், கிருதுமால் நதி புராண சிறப்பு மிக்கது. இது விராட்டிபத்து, வழியாக பொன்மேனி, மதுரை எல்லீஸ்நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து, கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 54 கி.மீ. தூரம் கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதிக்கு தேவையான தண்ணீர் நாகமலை மற்றும் வைகை ஆற்றில் இருந்தும் தண்ணீர் இந்த துவரிமான் கண்மாய்க்கு கூடுதலாக வந்து சேர்ந்துள்ளது. இதனால் இந்த நதி வற்றாத நதியாக ஒடிக்கொண்டிருந்தது.  18 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலம் பயன்பெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால்நதி, இப்போது சீரழிந்து கிடக்கிறது.

மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் ஓடிக்கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல இந்த நதியின் இரண்டு கரையும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு தற்போது 10 அடியாக குறுகி ஓடிக்கொண்டு உள்ளது. கிருதுமால் நதியின் முகதுவாரம் என்பது விராட்டிபத்துக்கும், அச்சம்பத்துக்கும் இடையை உள்ள வண்ணான்துறை இடம் ஆகும்.
 தற்போது இந்த ஆற்றில் ஏற்குடி, அச்சம்பத்து ஊராட்சியில் உள்ள குப்பைகள், கழிவுகளை கொண்டு வந்து ஊராட்சி நிர்வாகமே கொட்டி ஆற்றை  அழித்தும், மாசுப்படுத்துகின்றது. ராமேஸ்வரம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை இந்த ஆற்றை ஒட்டி செல்கிறது. ஊராட்சி சார்பில் கொட்டப்படும் கழிவுக்கு அடிக்கடி தீ வைத்து விடுகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்வோர் கண் எரிச்சல், பயங்கர துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் குடியிருப்போர் இந்த புகையால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று விராட்டிபத்தில் கொக்குளப்பியில் மாநகராட்சி நிர்வாகம் பாதாளச் சாக்கடை கழிவுகளை இந்த ஆற்றில் திறந்துவிட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகிய பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.  வரலாற்று சிறப்பு மிக்க இந்த கிருதுமால் ஆற்றை அழித்து, மாசுபடுத்தி வரும் மாநகராட்சி மற்றும் ஊராட்சி மீது பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொது மக்களும் வாகன ஒட்டிகளும்  வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்